[X] Close

கார்த்திக்கு சிபிஐ காவல் சரியானதே: சுப்ரமணியன் சுவாமி

CBI-is-right-for-Karthi--Subramanian-Swamy


கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது சரியான முடிவு என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

கார்த்தியிடம் நடத்தும் விசாரணையின் மூலம் இந்த முறைகேட்டில் ப சிதம்பரத்தின் பங்கு என்ன என்பது தெரியவரும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அபிஷேக் மனு சிங்வி முன் வைத்த வாதத்தை ஏற்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பண மோசடிக்கு வித்திட்டது ப சிதம்பரம் வழங்கிய அனுமதியே என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

முன்னதாக ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி பெற்றுத்தருவதற்காக கார்த்தி சிதம்பரம் கையூட்டு பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன.


Advertisement


 


Advertisement

Advertisement
[X] Close