[X] Close

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Pon-Radhakrishnan-question-about-Jayalalitha-Death

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்ந்து நீடிக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பெட்ரோலியப் பொருட்களை, அதிக செலவில் வெளிநாடுகளிலிருந்து வாங்குகிறோம். அதனை போக்கவே, பல்வேறு திட்டங்கள் 1958ம் ஆண்டு முதலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போராடுபவர்களுக்குப் பெரிதாக தெரிகிறது. தமிழக அரசின் திட்டங்கள், செயல்வடிவம் பெறாமலே இருக்கிறது. இனியாவது செயல்வடிவம் பெற்று மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை. தற்போதுள்ள முதல்வரும் அதைச் செய்யவில்லை. மருத்துவமனையில் 27 கேமரா அகற்றப்பட்டது குறித்து எந்த அறிக்கையும் மருத்துவமனை தரப்பில் கொடுக்கவில்லை. மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். ஆனால் அதுகுறித்து மக்களுக்குத் தெளிவாக சொல்ல மறுக்கிறார்கள். மர்ம்மான சூழல் நீடிக்கிறது’ என்றார். நெடுவாசலில் போராடுபவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு தொடந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close