Published : 05,Mar 2017 04:45 PM

அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஓ.பி.எஸ்... விஜயபாஸ்கர் கண்டனம்

minister-vijayabaskar-accused-on-opanneerselvam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்து, விஷமத்தனமான கருத்துகளை ஓ.பன்னீர்செல்வம் கூறிவருவதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மை நிகழ்வுகள் அனைத்தையும் உடனிருந்து அறிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் ஆதாயத்திற்காக, ஆட்சேபத்திற்குரிய அபத்தமான செய்திகளை தெரிவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை, மரணம் பற்றி சந்தேகம் இல்லை எனக்கூறியவர் பன்னீர்செல்வம், தற்போது ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் நிலைக்கு தரம் தாழ்ந்துவிட்டார் என அவர் சாடினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்