கோவில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்க முடியாத நிலையில், இந்து சமய அறநிலையத்துறை எதற்கு செயல்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி மகாதேவன், கோவில் சிலை கடத்தலை தடுக்க பல்வேறு உத்தவுகளை பிறப்பித்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தவுகளை நிறைவேற்றி தருவதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகளை பாதுகாக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் பல சிலைகள் அழியும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி ஆர்.மகாதேவன், தான் நேரில் சென்று பார்த்த ஆயிரத்து 700 கோவில்களிலும் இதே நிலை இருப்பதாகவும், பழமையான சிலைகள் இருட்டு அறையில் வைக்கப்படுகிறது என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு செயல்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். உயர்நீதிமன்றம் பிறப்பித்த 21 வழிமுறைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தலைமையில் ஆலோசனை நடத்தி, வரும் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!