[X] Close

தமிழக மீனவர்கள் 24 பேர் கைது

24-TN-Fishermen-arrested

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக‌, மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை 4 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் மீனவர்கள், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதே போன்று‌ ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த, 9 மீனவர்‌களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்களைக் கண்டித்து மீனவர் சங்க பிரநிதிகள் தலைமையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close