[X] Close

நாளை முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

LPG-tanker-lorries-strike-from-tomorrow

நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த டேங்கர் லாரிகளை அந்தந்த மாநிலங்களில் தான் இயக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறி வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டேங்கர் லாரி உரிமையாளர்கள், பழைய முறைப்படி அகில இந்திய அளவில் டெண்டர் விட வலியுறுத்தியுள்ளனர். நாமக்கலில் நடைபெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் 4,500 டேங்கர் லாரிகள் பங்கேற்கும் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close