Published : 07,Feb 2018 11:45 AM

ஜோக்கர் படபாணியில் கழிவறைக் கட்டுவதில் மோசடி 

Toilet-Scheme-issues-in-Coimbatore

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில், ஜோக்கர் படபாணியில் மலைவாழ் மக்களை மோசடி செய்திருப்பது புதி‌யதலைமுறையின் கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 45 குடும்பங்களுக்கு கழிவறை கட்டிக்கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டது. 45 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா, 12 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் ஈஸ்வரன் அந்தப் பணத்தை முறைகேடாக எடுத்துக் கொண்டதாக மலைவாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 45 கழிவறைகளில் ஒன்றை மட்டும் கட்டுக்கொடுத்துவிட்டு, ஜோக்கர் பட பாணியில் அனைவரையும் அந்தக் கழிவறைமுன் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். கழிவறை கட்டிக்கொடுக்காமல் ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜனிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மலைவாழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்