Published : 27,Jan 2018 10:45 AM

ஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் புது விளக்கம்

Minister-Pon-Radha-Krishnan-on-Jeeyar-sadagopa-Ramanujar-speech

இந்துக் கடவுள்களை மேடை போட்டு விமர்சித்தால் சோடா பாட்டில் வீசவும் அஞ்சமாட்டோம் என, ஸ்ரீவில்லிப்புதூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியுள்ளதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புது விளக்கம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜீயர், சாமியார்களால் என்ன செய்து விட முடியும் என நினைப்பவர்களுக்கு, எதற்கும் துணிந்தவர்கள் என்பதை காட்டுவோம் என கூறியுள்ளார். மேலும், ''நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்'', ''மேடையை நோக்கி எங்களுக்கும் கல் எறியத் தெரியும்'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

            

ஜீயரின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “நல்ல அர்த்தத்தில் ஜீயர் பேசியிருப்பார். அருந்திவிட்டு காலியானால் தூக்கி வீசுவது பற்றி பேசியிருப்பார்” என்று புது விளக்கம் அளித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்