Published : 02,Mar 2017 02:06 AM

ஆட்டோ ஓட்டிய மைக்கேல் கிளார்க்

Michael-Clarke-learns-to-drive-tuk-tuk-ahead-of-India-vs-Australia-2nd-Test-at-Bengaluru

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

இந்திய -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நாளை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க், சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றில் ஏறினார். தானே ஓட்டுவதாக டிரைவரிடம் சொல்லவும், புன்னகைத்த ஆட்டோ டிரைவர், ‘ஓட்டுங்க’ என்று ஆட்டோவைக் கொடுத்தார். பின்னர் பெங்களூர் சாலையில் ஜாலியாக ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார் கிளார்க். தனது அனுபவத்தை முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவாகவும் வெளியிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்