ஆண்டிபட்டி அருகே சொத்துப்பிரச்னையில் டீக்கடை உரிமையாளரையும் அவரது மகளையும் கார் ஏற்றிக்கொன்ற நபர் பிடிபட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ராமலிங்கபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை செல்வராஜ் டீக்கடையில் இருந்தபோது டீக்கடைக்குள் ஓட்டிவந்து காரை ரமேஷ், செல்வராஜ் மற்றும் அவருடைய 9 வயது மகள் அபிராமியை கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்த கண்டமனூர் காவல் துறையினர் ரமேஷை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சுற்றிதிருந்த ரமேஷை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்