[X] Close

மாநிலங்களவையில் தாக்கலாகிறது முத்தலாக் தடைச் சட்டம்

Triple-Talaq-Bill-To-Reach-Rajya-Sabha-Today

முத்தலாக் விவாகரத்து முறையை சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் முத்தலாக் தடை சட்டம் கடந்த வாரம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் மாநிலங்களவையில் இன்று சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தால் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் இந்தச் சட்டம் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது. இந்த முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தனக்கும் தனது குழந்தைகளுக்கு உரிய வாழ்வாதார உதவி வழங்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாடமுடியும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close