Published : 01,Jan 2018 04:23 PM

ரஞ்சிகோப்பை: முதல்முறையாக விதர்பா அணி சாம்பியன்

Live--Ranji-Trophy-2017--Final--Live-Cricket-Score-of-Delhi-vs-Vidarbha-Day

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி அபார வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 295 ரன்களும், விதர்பா அணி 547 ரன்களும் எடுத்தன. டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதிகபட்சமாக நிதிஷ் ரானா 64 ரன்கள் எடுத்தார். 29 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, விதர்பா அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில் எட்டியது. இந்த வெற்றியை அந்த அணியின் வீரர்கள், நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். ரஞ்சிக்கோப்பையை விதர்பா அணி வெல்வது இதுவே முதல்முறையாகும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்