[X] Close

ஏமாற்றினார் கிறிஸ் கெய்ல்: வெஸ்ட் இண்டீஸ் தோல்வி!

New-Zealand-beat-West-Indies-by-47-runs

நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, தோல்வியைத் தழுவியது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இப்போது விளையாடி வருகிறது. 

முதல் ஒரு நாள் போட்டி, நெல்சனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது.


Advertisement

பின்னர் கடினமான அந்த இலக்கை நோக்கிய ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவியது. அதிக ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிளெட்சர் மட்டுமே அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close