வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி நினைவாக நடப்பட்ட இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி அழிந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமி நினைவாக நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர கிராமங்களில் நடப்பட்ட இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் போதிய பராமரிப்பின்றி அழிந்துள்ளன. சுனாமி பாதிப்பு போன்று மீண்டும் ஒருமுறை நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாலுவேதபதி, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்களில் கடந்த 2005 ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. 24 மணி நேரத்திற்கு இரண்டு லட்சத்து 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.
புஷ்பவனம் கிராமத்தில் நடப்பட்ட அந்த மரங்கள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு சமூக விரோதிகளால் தற்போது வெட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தில் நினைவு கல்வெட்டு மட்டுமே எஞ்சி நிற்கிறது. பேரிடர் தடுப்பாக நடப்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மீண்டும் மரம் நட்டு உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai