[X] Close

ஐசிசி கனவு அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனைகள்

Indian-players-in-the-ICC-Dream-Team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கனவு அணியில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், ஏக்தா பிஷ்ட் ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவோர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி மகளிர் அணியில் மிதாலி ராஜ், ஏக்தா பிஷ்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இருபது ஓவர் போட்டிகளுக்கான அணியில் ஹர்மன்பிரீத் கவுர், ஏக்தா பிஷ்ட் தேர்வாகியுள்ளனர். இதில் சுழற்பந்து வீச்சாளர் ஏக்தா பிஷ்ட் இரண்டிலும் தேர்வாகி அசத்தியுள்ளார். இவர், ஒரு நாள் போட்டி தரவரிசையில் 14வது இடத்தை பெற்றுள்ளார். தனது அபாரமான பந்து வீச்சால் பல சாதனைகளை புரிந்து வருகிறார்.

ஒருநாள் அணிக்கு கேப்டனாக இங்கிலாந்து வீரர் ஹீதர் நைட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 20 ஓவர் போட்டி அணிக்கு வெஸ்ட் இண்டீசின் ஸ்டபானி டெய்லர் தேர்வாகி உள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close