குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்கள் படபடக்கும் திருப்பங்கள் அரங்கேறின. முதலில் பாஜகவும், பின்னர் சில நிமிடங்கள் காங்கிரஸும் முன்னிலை பெற்றது. ஆனால் 10 மணிக்கு மேல் நிலவரம் முற்றிலும் மாறிப்போனது. பாஜக 20-30 இடங்கள் முன்னிலை பெற்று, அதே நிலைதான் தொடர்ந்து நீடித்தது. காங்கிரஸ் 75 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும் முன்னிலை பெற்று வந்தன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு கீழே முன்னிலை பெறும் நிலை இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது.
இறுதியில், மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77, பாஜக 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2, சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முந்தையை தேர்தலை விட பாஜக 16 இடங்கள் குறைவாக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்கள் அதிகமாக வென்றுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!