Published : 15,Dec 2017 07:22 AM

அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறுவதாக தகவல்

Sonia-Gandhi-retired-from-Politics-

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி 1998-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். சோனியா காந்தியின் தீவிர அரசியல் பிரவேசத்தால் அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நேர்ந்தும் பல எதிர்ப்புகள் காரணமாக அவர் பிரதமராக பொறுப்பேற்க முன்வரவில்லை. மன்மோகன் சிங்கைதான் இரண்டு முறை பிரதமராக பொறுப்பேற்க வைத்தார். இதனிடையே கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். தீவிர அரசியலில் இருந்தும் சற்றே விலகி இருந்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சோனிய காந்தி, தனது நீண்ட கால மவுனத்தை மெதுவாக கலைத்தார். என்னுடைய பங்கு இனி ஓய்வு பெறுவதுதான் என்றார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்