[X] Close

ஆஷஸ் டெஸ்ட்: மிலன், பயர்ஸ்டோவ் சதம்!

England-collapse-after-twin-tons-to-post-403

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 403 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான அலெஸ்டர் குக் 7 ரன்களிலும், மார்க் ஸ்டோன்மேன் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜோ வின்ஸ் 25 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 20 ரன்களும் சேர்த்தனர். 5-வது விக்கெட்டுக்கு ஜானி பயர்ஸ்டாவ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலன் சர்வதேச போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார். 


Advertisement


முதல் நாள் முடிவில் டேவிட் மலன் 110 ரன்களுடனும், பயர்ஸ்டோவ் 75 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. நிதானமாக ஆடிய பயர்ஸ்டோவ் சதமடித்தார். அவர் 119 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க் பந்தில் போல்டானார். மலன் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமலும் வோக்ஸ் 8 ரன்களிலும், ஓவர்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிராடு 12 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழக்க முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 403 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஹசல்வுட் 3, கம்மின்ஸ் 2, லியான் 1 விக்கெட்டை எடுத்தனர். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close