ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு ஆதரவாக வெளிநாடு வாழ் தமிழர்கள் வீடியோ மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டம்துறை, சின்னத்துறை ஆகிய கடற்கரை கிராமங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மீனவ குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று வருகின்றனர். குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும், காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சட்டக்கல்லூரி மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், மீனவர்களை மீட்பதற்கு ஆதரவாக வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள், வீடியோ மூலம் மீனவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மற்ற நாட்டில் வாழும் தமிழர்களும் மீனவர்களுக்கு ஆதரவாக ஓன்று கூட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அட்லாண்டிக் கரையிலிருந்து தமிழ் மீனவர்களுக்கு கரம் கொடுப்போம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்