Published : 13,Dec 2017 05:06 AM

கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உள்பட மூவர் கைது

3-People-arrested-for-Illicit-Liquor-in-Pudukottai

கந்தர்வகோட்டை அருகே கள்ளச்சாரம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நடுப்பட்டியில் சிலர் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால் பிரிவு உதவி ஆணையர் ஜெயபாரதிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலை அடுத்து கலால் பிரிவு அதிகாரிகள் நடுப்பட்டிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பட்டியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதம் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து ரஞ்சிதம் மற்றும் அவருக்கு கள்ளச்சாரயம் காய்ச்ச உதவி புரிந்த செல்வமுருகன், நடராஜன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து கந்தர்வக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்துள்ள 3 பேரின் மீது மது விலக்கு அமலாக்க பிரிவிலும் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்