[X] Close

விஷால் போட்டியிடுவதன் பின்னணி தெரியவில்லை: அமீர்

who-back-ground-in-Vishal-contest-in-RK-Nagar-Ameer

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். 


Advertisement

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறையில் தொலைபேசி வழியே பேசிய அமீர், “யாரை எதிர்த்து எந்த நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால். இந்தத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் என்ன லாபம்? விஷால் போட்டியிடுவதன் பின்னணி தெரியவில்லை. சுயேட்சையாக போட்டியிடும் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். விஷால் நோக்கம் பற்றி தெரியாமல் கருத்து தெரிவிக்க முடியாது" என்று கூறினார்.

நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர், "தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அப்படி நின்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, பிறகு முடிவெடுப்பேன். வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது”என்றார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close