Published : 06,Jan 2017 06:36 AM

உதயநிதி ஸ்டாலினின் புதிய படம் இப்படை வெல்லும்?

Udhayanidhi-Stalin-new-Movie

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்திற்கு இப்படை வெல்லும் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக எம்மனசு தங்கம் எனும் படித்தில் நடித்து வரும் உதயநிதி, கவுரவ் இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இப்படை வெல்லும் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதியும் வில்லனும் பூனை எலி விளையாட்டு விளையாடும் படம் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சமூகப் பிரச்சனையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம் ஒரு அக்ஷன் த்ரில்லர் படம் என்கிறார்கள். லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை டி.,இமாம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்