Published : 27,Nov 2017 05:49 AM

மனிதனின் வயிற்றுக்குள் 263 ரூபாய் நாணயங்கள், பிளேடு, ஊசி: டாக்டர்கள் ஷாக்!

263-Coins--Blades--Found-In-Madhya-Pradesh-Man-s-Stomach

மனிதனின் வயிற்றுக்குள் 263 நாணயங்கள், பிளேடுகள், ஊசிகள் உள்ளிட்ட வை இருந்ததை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ளது சோஹவல். இந்த ஊரைச் சேர்ந்தவர் 32 வயதான முகமது மக்சூட். இவர் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி கடந்த 18-ம் தேதி சஞ்சய் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்த டாக்டர்கள் எஸ்-ரே உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர். 

அப்போது அவர் வயிற்றுக்குள் ஏராளமான ரூபாய் நாணயங்கள் இருப்பது தெரிந்தது. மேலும் ஊசிகள், பிளேடுகள் ஆகியவையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆறு டாக்டர்கள் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டனர். அவர் வயிற்றில் இருந்து 263 நாணயங்கள் எடுக்கப்பட்டன. 10-12 பிளேடுகள், நான்கு ஊசிகள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவையும் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் 5 கிலோ எடைகொண்டவை. 

இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, ‘நோயாளி, சரியான மன நிலை கொண்டவராகத் தெரியவில்லை. இத்தனை பொருட்களையும் அவர் யாருக்கும் தெரியாமல் முழுங்கி இருக்கிறார். அவர் இன்னும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்’ என்று தெரிவித்தனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்