[X] Close

இலங்கை பேட்டிங்: இந்திய கிரிக்கெட் அணியில் 3 மாற்றம்!

Unchanged-Sri-Lanka-bat--Shami-out-with-niggle

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் தமிழக வீரர் முரளி விஜய் அணியில் இடம்பெற்றுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தா நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்கியது. இலங்கை அணியின் மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரர்களே இதிலும் ஆடுகின்றனர். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். தவானுக்கு பதிலாக முரளி விஜய், மற்றொரு பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். 

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி அந்த அணியின் சமரவிக்ரமாவும் கருணாரத்னேவும் ஆடிவருகின்றனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close