Published : 22,Nov 2017 01:41 PM
அவசரம் தேவையில்லை: ரஜினிகாந்த் பேட்டி

களத்தில் இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை என்று நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகா் ரஜினிகாந்த் தற்போது 2.ஓ படபிடிப்பை முடித்துக் கொண்டு கபாலிக்கு தயாராகி வருகிறார். கா்நாடகா சென்றிருந்த அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரசிகர்களை பிறந்தநாளுக்கு பிறகு சந்திக்க இருப்பதாக கூறினார். களத்தில் இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் மவுனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் ரஜினி அவசரம் இல்லை என்று கூறியுள்ளார்.