[X] Close

ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

TN-CM-Edappadi-palaniswamy-to-meet-governor

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார்.


Advertisement

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இந்தநிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்க இருக்கிறார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கான கடிதத்தை ஆளுநரிடம் முதலமைச்சர் அளிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close