சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீஸர் எப்போது வெளியிடப்படும் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்' அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின், 'நானா தான வீணா போன', 'சொடக்கு மேல சொடக்கு போடுது' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் படத்தின் மீது ரசிர்களுக்கு எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் எப்போது வெளியிடப்படும் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு