[X] Close

குஜராத் தேர்தலில் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை

Election-commission-bane--pappu--word-in-Gujarat-election

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வி‌ளம்‌பரத்தில் பாஜகவினர் பப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 


Advertisement

வடமாநிலங்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று கூறி பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். பப்பு என்றால் சிறுவன் என்று பொருள். இந்த வார்த்தையை சமூக வலைத்தளங்களிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் குஜராத் பாஜகவினர் பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். அந்த வார்த்தையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குஜராத் மாநில பாரதிய ஜனதாவினர், தேர்தல் விளம்பரத்தி‌ற்கான ஸ்கிரிப்ட்‌டை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். அதில் பப்பு எ‌ன்ற வார்த்தை இடம் பெ‌ற்றிருந்ததால், அந்த வார்த்தையை நீக்க தேர்தல் ஆணையம் உத்த‌ரவிட்டுள்ளது. மேலும் பாஜகவினர் யாரும் பிரச்சாரத்தின் போது அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close