[X] Close

அதிகபட்ச ஜிஎஸ்டி வரி 18%: ஸ்டாலின் வலியுறுத்தல்

MK-Stalin-Comments-GST-Issue

ஜிஎஸ்டியின் கீழ் இனி அதிகபட்ச வரி 18 சதவீதம் மட்டுமே என்ற முடிவை உடனடியாக எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மக்களின் பாதிப்புகளை எல்லாம் கண்டுகொள்ள மறுத்த பாரதிய ஜனதா அரசு, இன்று குஜராத் தேர்தல் நேரத்தில் வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது என கூறியுள்ளார். அரசின் தேவைகளுக்காக செய்யப்படும் இதுபோன்ற மாற்றங்கள், மாநில வரி உரிமையை மத்திய அரசு கைப்பற்றிக்கொண்டது என்ற திமுகவின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக உள்ளது என கூறியுள்ளார். 

ஜிஎஸ்டியின் கீழ் 213 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது ஒரு துவக்கம் என்றாலும், இதுவே முடிவல்ல என்ற மனநிலையை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு பெறவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளர். 


Advertisement

ஜிஎஸ்டி வரி அதிகபட்சமாக 18 சதவீத்துக்கு மேல் போகக்கூடாது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனே கூறியிருக்கிறார் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி 18 சதவீத வரியே அதிகபட்ச வரி என்ற நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய பாரதிய ஜனதா அரசு எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close