Published : 17,Feb 2017 09:02 AM
வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்த பெண் (வீடியோ)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவரை பெண் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
பாக்பத் நகரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்த அந்த நபரை கையால் தாக்கிய பெண் பிறகு ஆவேசமடைந்து காலணியால் விளாசத் தொடங்கினர். பின்னர் கீழே தள்ளி அடித்து உதைத்தார். இதையடுத்து அந்த நபரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.