[X] Close

புகைப்பதை நிறுத்தினால் ஊழியர்களுக்கு விடுமுறை: ஜப்பானில் ஒரு சலுகை

Smoking-wastes-time--Japan-firm-gives-non-smokers-6-extra-days--leave

ஜப்பான் நாட்டில் இயங்கி வரும் ஒரு ஆன்லைன் நிறுவனம் தனது பணியாளர்களை புகைப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


Advertisement

டோக்கியோவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், புகைக்கும் பழக்கம் உள்ள ஊழியர்களை விட இந்தப்பழக்கம் இல்லாத ஊழியர்கள் அதிகநேரம் பணிபுரிவதாகவும், இருந்தும் அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை என்றும் ஆதங்கப்பட்டார். குறிப்பிட்ட இந்த நிறுவனமானது அடுக்குமாடி கட்டடத்தில் 29வது தளத்தில் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் புகைப்பதற்காக தரைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு ஒரு தடவை சென்று வர குறைந்தது 10 நிமிடமாவது ஆகும். இப்படி ஒரு ஊழியர் பலமுறை சென்று வந்தால் நேரம் வீணாகிறது.அவர்கள் பணிபுரியும் நேரம் குறைகிறது. ஆனால் புகைக்கும் பழக்கமில்லாத ஊழியர்கள் இது போன்று அடிக்கடி வெளியில் செல்லாததால் அதிக நேரம் உழைக்கின்றனர். இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒரு ஊழியர் கேட்டிருந்தார். புகைப்பவர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்த நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது.

அதன்படி அலுவலக நேரத்தில் புகைப் பிடிக்காமல் பணிபுரியும் ஊழியர்களும் கூடுதல் விடுமுறை அளிக்கப் போவதாக தெரிவித்தது.இதனால் ஒரு சிலர் புகைக்கும் பழக்கத்தை கைவிட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஆறு நாட்கள் வரை கூடுதலாக விடுமுறை கிடைக்கும் என்பதால், புகைப் பழக்கத்தை கைவிட முடிவு செய்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close