[X] Close

ரெய்டுக்கு நடுவில் வீட்டில் கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்..!

TTV-Dhinakaran-held-Pooja-while-Income-Tax-Raid

சென்னையில் உள்ள அடையாறு இல்லத்தில், வருமான வரித்துறையினரின் சோதனை ஒருபுறம் நடைபெற மறுபுறம் டிடிவி  தினகரன் கோ பூஜை நடத்தினார்.


Advertisement

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. சென்னை அடையாறில்உள்ள டிடிவி தினரகன் இல்லத்திலும், போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தங்களுடைய இல்லத்தில் கோ பூஜை நடத்த அனுமதி தர வேண்டும் என டிடிவி தினகரனின் மனைவி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பின் அனுமதி கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சோதனை ஒருபுறம் நடைபெற வீட்டின் மறுபுறம் கோ பூஜை நடைபெற்றது. அப்போது டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா பசுவுக்கு பழங்களை வழங்கினர். அப்போது பேசிய டிடிவி தினகரன், வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவுக்கு பின் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close