Published : 17,Feb 2017 05:35 AM

பதவியில் நீடிப்பாரா பழனிசாமி... பொன். ராதாகிருஷ்ணன்

Pon-Radha-krishnan-questioned-to-Chief-Minister-Palanisamy

தமிழக முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நாளை இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் யோசித்து எடுத்த முடிவு தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வருமா என்பது நாளைதான் தெரியும் என கூறினார். தமிழகத்தை இரு கழகங்களும் அழித்து விட்டதாக கூறிய அவர், தற்போது மேலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடும் என்றார்.அதிமுக, திமுக முடிந்து விட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருவதாக கூறினார், குடும்ப, ரவுடி ஆட்சியை கொண்டு வர வேண்டாம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.காவல்துறை பாதுகாப்பு

கொடுக்க முடியாத கேவலமான நிலையில் உள்ளது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த போது அவரது கட்டுப்பாட்டில் காவல்துறை மட்டும்தான் இருந்தது என்றும், காவலர்கள் இல்லை என்றும் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது பதவி ஏற்று உள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் 100 சதவிகிதம் இருக்காது என்றார்.முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நாளை இருப்பாரா என்பது கேள்விக்குறிதான். அதற்கு வேறு யாரும் காரணமில்லை அவரது கட்சிக்காரர்கள் தான் காரணம். பழனிசாமி என்னுடைய சகோதரர் போன்றவர் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலில் திமுகவை தவிர்த்து வேறுயாரும் திமுக ஆட்சி வர வேண்டும் என்று சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்