சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழகத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும், நிலையில் பல்வேறு பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. அத்துடன் டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் சூழலில், தற்போது மேலும் மழை பொழிவதால் அதிக கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்கள் அதிகரிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும் அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. மழை காரணமாக ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி