நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. டி20 போட்டியில் இதுவரை நியூசிலாந்தை வென்றதில்லை என்ற வரலாற்றை, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று மாற்றியது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்த அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் முதல் டி20 போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, இந்திய வீரர்கள் தவானும், ரோகித்தும் இணைந்து முதல் விக்கெட்டு 158 ரன்கள் குவித்தனர். டி20 கிரிக்கெட்டில், இந்திய ஜோடி 150 ரன்களுக்கு மேல் குவித்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் ரோகித்தும் விராத் கோலியும் இணைந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2015-ம் ஆண்டில் 2 வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்தது.
தவான் 8 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை நியூசிலாந்தின் சான்ட்னரும், ரோகித் சர்மா 16 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய கேட்ச்சை சவுதியும் கோட்டை விட்டனர். இதையடுத்து இருவரும் தலா 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!