[X] Close

ஆளுநர் நாளைக்குள் முடிவை அறிவிப்பார்... அமைச்சர் ஜெயக்குமார் எதிர்பார்ப்பு

Governor-announced-his-decision-Tomorrow--Minister-Jeyakumar

ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளைக்குள் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆளுநர் நாளைக்குள் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும், நிச்சயமாக ஜனநாயகத்தை அவர் காப்பார் என நம்புவதாகவும் கூறினார். 124 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 8 எம்எல்ஏ-க்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close