Published : 01,Nov 2017 11:21 AM
தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீடு ரத்து

கன மழையால் தீரன் அதிகாரம் ஒன்று ரத்து இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் "தீரன் அதிகாரம் ஒன்று”. இதன் டீசர் மற்றும் ட்ரைலர் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ட்ரெய்லர் திரை ரசிகர்கள் இடையே ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 2 அன்று நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தனர். தொடந்து சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு,எஸ்.ஆர். பிரபு அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே அறிவித்தது போல் பாடல்கள் இணையத்தில் நாளை வெளியாகும். இப்படம் வருகிற நவம்பர் 17 தேதி வெளியாக உள்ளது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.