மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு நடுவே மெர்சல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி 200 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மெர்சல் திரைப்படத்தில் படத்தில் மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் விஜய் பேசியுள்ளார். இதை விஜய் உள்நோக்கத்துடன் பேசியதாகவே நாங்கள் கருதுகிறோம். உடனடியாக இந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
இந்த நிலையில், திருச்சி, கடலூர், கன்னியாகுமரியில் மெர்சல் படத்திற்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் பிரபல திரையரங்கம் முன் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி