Published : 29,Oct 2017 03:20 AM

காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி தேவை: ப.சிதம்பரம்

Chidambaram-Seeks-Greater-Autonomy-For-Jammu-And-Kashmir--Slammed-By-BJP

காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கப்படவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தின் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், காஷ்மீரில் சுதந்திரம் வேண்டும் என கோரும் பெரும்பான்மையானவர்கள் இந்திய சட்டங்களுக்குட்பட்ட கூடுதல் சுயாட்சியை தான் கோருவதாக கூறினார். எனவே காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிதம்பரத்தின் தலைவர் பாரதம் துண்டுதுண்டாக உடையும்
என குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவு அளித்தவர் என்பதால், சிதம்பரம் இவ்வாறு பேசியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என கூறினார்.

இந்தியாவின் ஒற்றுமைக்காவும், வளத்திற்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட சர்தார் பட்டேல் பிறந்த குஜராத் மண்ணில் சிதம்பரம் இவ்வாறு பேசியிருப்பது அவமானகரமானது எனவும் ஸ்மிருதி இராணி குறிப்பிட்டார். இதனிடையே கூடுதல் சுயாட்சி குறித்த பேச்சு ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்