[X] Close

சென்னையில் 80 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றம்

80-Ton-Cracker-dust-removed-from-chennai-city-corporation

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று சுமார் 80 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 19 ஆயிரம் பேர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அகற்றப்பட்ட பட்டாசுக் குப்பைகள் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்பேரில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் ஆசை தீர பட்டாசுகளை கொளுத்தி தள்ளினர். வானவேடிக்கையால் வானமே வண்ணமயமாக மாறினாலும், புகைமூட்டம் மக்களை அவதியுறச் செய்தது. சென்னை மாநகர் முழுவதுமே புகை மூட்டத்தால் சூழப்பட்டது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், செளாகார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், மணலி, வேளச்சேரி, அடையாறு, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்பட்டதால் சாலைகளி்ல் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. எதிரே வரும் வாகனங்கள் கூட எதுவென்று தெரியாத அளவிற்கு புகைமூட்டம் காணப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னை முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசு காகிதங்களால் சென்னையே குப்பை மேடானது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 80 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close