Published : 17,Oct 2017 01:37 PM

அயர்லாந்தை தாக்கிய ஒஃபிலி‌யா புயல்: 3 பேர் பலி

Ireland-cyclone-deaths

அயர்லாந்தை தாக்கிய ஒஃபிலி‌யா புயலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

அயர்லாந்தின் கால்வேவில் மணிக்கு 190கி.மீ வேக‌‌த்தில் வீசிய புயலால்‌ சாலைகளில் இருந்‌த மர‌ங்கள் முறிந்து விழுந்தன. அத்துடன் வீடுகளில் இருந்த கூரைகளும் சேதமடைந்தன. மின் இணைப்பு‌ மற்றும் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் சுமார் 4 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. 30 அடி‌ உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி, கரையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்‌களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் இந்தப் புயலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்