Published : 17,Oct 2017 12:37 PM

நமீதாவை திருமணம் செய்ய போகிறாரா சரத்பாபு?

sarath-babu-gets-actress-namitha-marriage-

நடிகை நமீதாவை மூத்த நடிகர் சரத்பாபு திருமணம் செய்ய கொள்ள போவதாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவி வந்தது. அதை குறித்து இருவரும் தற்சமயம் விளக்கமளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நமீதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரை விட அவர் பயன்படுத்தும் ‘மச்சான்ஸ்’ வார்த்தை அவ்வளவு பிரபலம்.சில வருடங்களாக அவர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் அவரது மார்க்கெட் லேசாக உயர்ந்தது. இந்நிலையில், இவருக்கும் மூத்த நடிகரான சரத்பாபுவிற்கும் திருமணம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பரவியது. 

நடிகர் சரத்பாபுவும் நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதர் வாழ்க்கையை கடைப்பிடித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி குறித்து நமீதா தரப்பில் மறுப்பு அளிக்கப்படாமல் இருந்தது. சில பத்திரிகை தரப்பில் அவரை விளக்கம் கேட்டதற்கு, 'ஏன் உங்களுக்கு இப்படிப்பட்ட கேவலமான சந்தேகங்கள் எல்லாம் வருகிறது?' எனக் கேட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து நடிகர் சரத்பாபு, 'கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த மாதிரியான வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இது எனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது' என்று கூறியுள்ளார். மேலும் 'நமீதாவை நான் பார்த்தே ரெண்டு வருடங்களாகிவிட்டது. இனிமேலும் அவருடன் என்னை இணைத்துப் பேசுவது இருவரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என அவர் கூறியிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்