[X] Close

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ராஜ்நாத் சிங்

No-power-can-stop-resolution-of-Kashmir-issue--Rajnath-Singh

காஷ்மீர் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Advertisement

குஜராத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக கூறினார். காஷ்மீர் குறித்து யாரும் கவலையடைய தேவையில்லை என கூறிய ராஜ்நாத்சிங் இந்திய எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முழு முயற்சி எடுத்ததாகவும், ஆனால் பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை என கூறினார்.
 


Advertisement

Advertisement
[X] Close