இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இன்று கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
தேசிய தமிழ்த்தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பலர் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து, கண்டன குரல் எழுப்பினர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்புக்களை சார்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
என்னது.. 'ஃபாஸ்ட் டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து விலகியது சீனா! இந்தியாவுக்கு பாதிப்பா?
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'