Published : 14,Oct 2017 08:52 AM

மஞ்சளார், சோத்துப்பாறை அணைகள் நாளை திறப்பு

Sothuparai-Dam-Water-Release-Tommorrow

தேனி மாவட்டம் பெரியகுளம்  மஞ்சளார் மற்றும் சோத்துப்பாறை அணைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை திறந்து வைக்கி‌‌றார். 

தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போதிய மழை இல்லாத நிலையில், இப்பகுதிகளில் நெல் ‌சாகுபடி தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் முதல் பெய்த தொடர்மழை காரணமாக மஞ்சளார் மற்றும் சோத்துப்பாறை அணைகள் நிரம்பின. எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக நாளை இரு அணைகளும் திறக்கப்பட உள்ளன. 
தற்போது மஞ்சளார் அணையின் முழு அளவான 57 அடியில் 55 அடி நீர் மட்டமும், சோத்துப்பாறை அணையின் முழு அளவான 126.28 அடியில் நீர்மட்டம் முழு அளவிலும் இருக்கிறது. எனவே தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும் வகையில் நாளை அணைகள் திறக்கப்பட உள்ளன.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்