Published : 09,Oct 2017 05:18 AM

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அபார வெற்றி

Fifa-Under-17-World-Cup--England-thrash-Chile-in-Kolkata

ஜூனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் அணிகள் தங்களின் தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றுள்ளன.

கொல்கத்தாவில் நடைப்பெற்ற போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, சிலி அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. அதனைத் தொடர்ந்து நடந்த ஈராக்-மெக்சிகோ அணிகள் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கவுகாத்தியில் நடந்த  ‘ஈ’ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை பந்தாடியது. மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி 7-1 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியா அணியை வீழ்த்தியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்