[X] Close

பழைய பொருட்களில் கடல் வாழ் உயிரினங்கள் - கவர்ந்திழுக்கும் கலைத்திறன்

Models-of-Marine-lifes-by-waste-materials-in-tutucorin-park

தூத்துக்குடி ரோச் பூங்காவில் பழைய பொருட்களை கொண்டு கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாநகராட்சி, பொதுமக்களுக்கு பொழுதுபோக்குவதற்கு துறைமுக கடற்கரை பூங்கா, முத்துநகர் பூங்கா மற்றும் ரோச் பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன. இதில் முத்துநகர் பூங்கா மற்றும் ரோச் பூங்கா உள்ளிட்டவைகள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கடற்கரை சாலையில் அமைந்துள்ளன. ரோச் பூங்காவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய பொருட்களான இருச்சக்கர வாகனத்தின் சக்கரங்கள், பெட்ரோல் டாங்குகள், பழைய கேஸ் சிலின்டர், சிறியரக சக்கரங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு முத்துநகரை குறிக்கும் வகையில் முத்துச்சிப்பி, திமிங்கலம், இரால், படகு ஒட்டும் மனிதன், ஆக்டோபஸ், கடல் குதிரை, முதலை, கடல் தேவதை உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதன் முன்பாக நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து கொள்கின்றனர். ரோச் பூங்காவிற்கு போதுமான பொதுமக்கள் வராத நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினங்களை பார்வையிட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ரோச் பூங்காவில் போதுமான அளவு விளக்குகளை அமைக்க வேண்டுமென வலியுறுத்தும் பொதுமக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close