Published : 06,Oct 2017 04:34 AM

சாலையோர வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

chennai-corporation-orders-to-Remove-the-non-usage-vehicles-from-road-side

சென்னையில் சாலையோரங்களில் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ள‌ வாகனங்களை உடனடியாக‌ அப்புறப்படுத்த‌ வேண்டும் என மாநகராட்சி ஆ‌ணையாளர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்‌ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி ஆவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாகனங்களை ஒரு வாரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆ‌ணையாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்