[X] Close

சசிகலாவுக்கு எதிரான மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Supreme-Court-denies-petition-against-Sasikala

சசிகலாவுக்கு எதிரான மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராக எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சசிகலா முதலமைச்சராக பதவியேற்று, அதன்பின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மீண்டும் அதிமுகவினரால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை சசிகலா முதல்வராக பதவி ஏற்கக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


Advertisement

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உரிமை கோரியுள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close