சுந்தர்.சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற கலகலப்பு படத்தின் 2 பாகத்தில் நடிகர் மிர்ச்சி சிவா மீண்டும் இணைந்திருக்கிறார்.
’சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்திற்கு முன்பு ’கலகலப்பு’ படத்தின் 2 பாகத்தை எடுக்க முடுவு செய்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. இதற்கான நடிகர் - நடிகைகள் தேர்வு முடிந்து இறுதியாக நடிகர் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் பூஜையில் ரோபோ சங்கர், பிக் பாஸ் வையாபுரி, மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலகலப்பு படத்தின் முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா நடிப்பதை பற்றி எந்த வித தகவலும் வெளிவராத நிலையில் தற்போது சிவா இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ”நான் கலகலப்பு 2 - வில் இணைந்திருக்கேன்.. உங்கள் வாழ்த்துக்கள் தேவை” என்று சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் கலகலப்பு -2 படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்